கண்டதும் சுட உத்தரவு.. புதிய சட்டம் கேட்கும் கர்நாடக பாஜக அமைச்சர்..

பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடும் சட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு வர வேண்டும் என்று பாஜக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநில அமைச்சர் பி.சி.பாடீல் கூறுகையில், நாட்டுக்கு எதிராகப் பேசுபவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடும் சட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு வர வேண்டும். இப்போது இந்த சட்டம் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. நான் பிரதமரிடம் இதை வலியுறுத்துவேன். இந்தியாவில் வசித்துக் கொண்டு, உணவு, நீர், காற்று எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு நாட்டுக்கு எதிராகப் பேசும் துரோகிகளை அனுமதிக்கவே முடியாது. சீனாவில் நாட்டுக்கு எதிராக யாரும் பேசவே பயப்படுவார்கள். அதைப் போன்ற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

You'r reading கண்டதும் சுட உத்தரவு.. புதிய சட்டம் கேட்கும் கர்நாடக பாஜக அமைச்சர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுற்றிய அதிபர் டிரம்ப்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்