விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்சில் மோடி கலந்துரையாடல்

COVID-19: PM holds meeting with 40 elite sportspersons including Virat, Sachin, Sourav.

கொரோனா தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக 40 பிரபல விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிரதமர் மோடி இன்று(ஏப்.3) காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரபல விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இதில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, மேரிகோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40 வீரர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி அப்போது பேசுகையில், கொரோனா பரவாமல் தடுப்பதற்கு சமூக விலகலை மக்களிடம் வலியுறுத்துவது, மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஊரடங்கைப் பின்பற்றுதல் போன்றவை குறித்து மக்களிடம் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

You'r reading விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்சில் மோடி கலந்துரையாடல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டைரக்டர் கே.பாக்யராஜ் சொன்ன கதை.. கொரோனாவும் கடந்து போகும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்