மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 661 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Indias Covid-19 cases rises 3,374, largely driven by Tablighi Jamaat attendees.

இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 661 பேருக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இது வரை 77 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் என்னும் கொடிய தொற்று நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்தான் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து பிரதிநிதிகள் மூலமாக கொரோனா பரவியது தெரிய வரவும், நாடு முழுவதும் அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டனர். தற்போது நாடு முழுவதும் 3,374 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 1000 பேர், தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. நோய் பாதித்தவர்களில் இது வரை 267 பேர் குணமடைந்துள்ளனர். 77 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, தமிழ்நாட்டில் 485 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தை அடுத்து, டெல்லி, தெலங்கானா, உ.பி. மாநிலங்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

You'r reading மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 661 பேருக்கு கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக உயர்வு.. 485 பேருக்கு நோய்ப் பாதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்