மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சு வலி.. எய்ம்ஸ் மருத்துமனையில் சேர்ப்பு..

Manmohan Singh admitted to Delhi AIIMS hospital.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன்சிங், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். 87 வயதான மன்மோகன்சிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் பின்னர் வீட்டில் ஓய்விலிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


இதையடுத்து, அவரை நேற்றிரவு 8.45 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்ஜி உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். அவர் விரைவில் குணமடைவார். அவருக்காக இந்த நாடு பிரார்த்திக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சு வலி.. எய்ம்ஸ் மருத்துமனையில் சேர்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடு முழுவதும் ரயில்கள் நாளை முதல் இயக்கம்.. இ்ன்று முன்பதிவு செய்யலாம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்