இந்தியாவில் ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா.. 1.45 லட்சம் பேர் பாதிப்பு..

Total number of cases in India rises to 1,45,380

நாட்டில் இது வரை ஒரு லட்சத்து 45,380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், 60,490 பேர் குணமடைந்துள்ளனர். 4167 பேர் மரணமடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் பரவியுள்ள சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் தினமும் 5000, 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இன்று(மே 26) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 45,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 60,490 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 80,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் நேற்று உயிரிழந்த 146 பேரையும் சேர்த்து இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 4167 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 48 ஆயிரம் பேருக்கும், தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கும், குஜராத்தில் 14,500 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

You'r reading இந்தியாவில் ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா.. 1.45 லட்சம் பேர் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுக்கடைக்குப் போக நடிகரிடம் மாஸ்க் கேட்ட ரசிகர்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்