கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின் தேவையில்லை..

Govt mulling to discontinue Azithromycin on critical patients.

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அஸித்ரோமைசின் அளிப்பதை நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனாவுக்கு இது வரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம், மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின், அஸித்ரோமைசின் மாத்திரைகள் கொடுத்தால் கெரோனா வைரசின் தாக்கம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறினர்.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூட, முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை எடுத்து கொண்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.இந்தியாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அஸித்ரோமைசின், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அஸித்ரோமைசின் அளிப்பதால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை என்றும், அந்த மாத்திரையால் எந்த பலனும் இல்லை என்றும் சில மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த மாத்திரைகள் அளிப்பதை நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின் தேவையில்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்