இந்தியாவில் ஒரே நாளில் 15,000 பேருக்கு கொரோனா..

445 deaths, 14,821 new #COVID19 positive cases reported in India in single day.

இந்தியாவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 445 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 85 நாட்களுக்கு மேலாகி விட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. அதேசமயம், கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று புதிதாக 14,821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 25,282 ஆக அதிகரித்துள்ளது.
அதே போல், கொரோனா நோயாளிகள் 445 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 13,697 ஆக அதிகரித்துள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் ஒரு லட்சத்து 32,075 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

அம்மாநிலத்தில் மட்டுமே 6170 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து தமிழகத்தில் 59,377 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 757 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் டெல்லியில் 59,746 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 2175 பேர் பலியாகியுள்ளனர்.

You'r reading இந்தியாவில் ஒரே நாளில் 15,000 பேருக்கு கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 46வது பிறந்த தினம் விஜய்க்கு ராதிகா, காஜல், முருகதாஸ், அட்லீ, பாண்டிராஜ் வாழ்த்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்