கொரோனா காலத்தில் பாஜகவின் சாதனைகள்.. ராகுல்காந்தி கிண்டல்..

Rahul Gandhi lists govts achievement, crisis in Rajasthan is one of them.

கொரோனா தொற்று பரவும் காலத்தில் மத்திய பாஜக அரசு செய்த சாதனைகள் என்று 6 விஷயங்களைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் சீனப் பிரச்சனை, கொரோனா பரவல், பொருளாதார நிலைமை போன்றவை குறித்து பல்வேறு செய்திகளைச் சுட்டிக்காட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில் கமென்ட்ஸ் போட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது :
கொரோனா காலத்தில் மத்திய அரசு புரிந்த சாதனைகள் தெரியுமா.., பிப்ரவரி--நமஸ்தே டிரம்ப், மார்ச்--மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்--எல்லோரையும் மெழுகுவர்த்தி ஏற்ற வைத்தது, மே-- மோடி அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன்-- பீகாரில் ஆன்லைன் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளின் மூலம் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில் நாடு, தன்னிறைவு பெற்று விட்டது.இவ்வாறு கிண்டல் செய்துள்ளார் ராகுல் காந்தி.

You'r reading கொரோனா காலத்தில் பாஜகவின் சாதனைகள்.. ராகுல்காந்தி கிண்டல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி தற்கொலை முயற்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்