கர்நாடக முதல்வருக்கும் மகளுக்கும் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

Karnataka CM Yediyurappa admitted in hospital for Covid-19

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. சமீப நாட்களாக, முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்படப் பல வி.ஐ.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.எடியூரப்பாவைத் தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது இன்று(ஆக.3) காலை தெரிய வந்தது. இதையடுத்து, அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.எடியூரப்பா தனது டிவிட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதித்துள்ளதால், தன்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்த அலுவலக ஊழியர்கள் உள்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கவனமாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

You'r reading கர்நாடக முதல்வருக்கும் மகளுக்கும் கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிக் டாக்கை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் முயற்சி.. டிரம்ப் சந்திப்புக்கு பின் தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்