சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை..

Sabarimala Ayyappan temple opened on the eve of the monthly five-day puja.

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்குப் பூஜை நடைபெறவுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் உள்பட முக்கிய மாதங்களில் கோயில் நடை நீண்ட நாட்களுக்குத் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை நடைபெறும்.

மலையாள மாதமான சிங்கம் மாதத்திற்கான பூஜை செய்வதற்காகக் கோயில் நேற்று திறக்கப்பட்டது. இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் தொடங்கின. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மட்டும் அய்யப்பனைத் தரிசித்தனர். தொடர்ந்து 5 நாட்களுக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தெலங்கானாவில் வெள்ளப் பெருக்கு.. டிராக்டரில் கர்ப்பிணி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்