முகலாய மன்னர்கள் துரோகிகள் தாஜ்மஹாலை கொண்டாட தேவையில்லை - பாஜக தாக்கு

முகலாய மன்னர்கள் துரோகிகள் என்றும், தாஜ்மஹால் ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய வரலாறு அல்லவென்றும் பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியுள்ளார்.

முகலாய மன்னர்கள் துரோகிகள் என்றும், தாஜ்மஹால் ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய வரலாறு அல்லவென்றும் பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியுள்ளார்.

மீரட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உத்தரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் பேசியுள்ளார். அதில், “இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்த பாபர், அக்பர், அவுரங்கசிப்பை நாம் வரலாறு என்ற பெயரில் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்; அவர்கள் துரோகிகள்; அவர்களது பெயர் கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாளர்கள் மஹா ராணா பிரதாப், சிவாஜி பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்க வேண்டும்; ஆனால், வரலாற்றுப் புத்தகங்களில் இந்து மன்னர்கள் பலரது சரித்திரம் இடம்பெறவே இல்லை.

தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மறக்கப்பட்ட அத்தகைய இந்து மன்னர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும் மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதையும் இப்போது யாராலும் தடுக்க முடியாது” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “தாஜ்மஹால் சுற்றுலா தளத்தில் நீக்கப்பட்டது குறித்து வேதனை தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான் பின் நாளில் அவரது மகனால் சிறை வைக்கப்பட்டார்; தாஜ்மஹாலைக் கட்டியவர்தான் உத்தரப் பிரதேசத்தில் இந்துக்கள் பலரையும் குறிவைத்து தாக்கினார்; இதுதான் கொண்டாடப்பட வேண்டிய வரலாறா?” என்று கேட்கு எழுப்பியுள்ளார்.

You'r reading முகலாய மன்னர்கள் துரோகிகள் தாஜ்மஹாலை கொண்டாட தேவையில்லை - பாஜக தாக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரட்டை இலை சின்னம் யாருக்கு? - அக்டோபர் 23 இறுதி விசாரணை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்