சரிந்து விழுந்த ஐந்துமாடி கட்டிடம்.. 200 பேரின் கதி என்ன?!

200 trapped as building collapses in Maharashtras Raigad district

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மாகட் என்ற இடத்தில் இருந்த ஐந்துமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இருந்த சுமார் 200 இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களின் கதி என்னவென்பது தெரியவில்லை. தற்போது அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாலை 6:50 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள 5 தேசிய மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இடிபாடுகள் குறித்த போட்டோக்கள் வீடியோகள் பார்க்கும் அதிர்ச்சியை தருகிறது. தற்போது வரை 15 பேர் இடர்பாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 18 ம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள ரிஸ்வி கல்லூரிக்கு அருகில் காலியாக இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சரிந்து விழுந்த ஐந்துமாடி கட்டிடம்.. 200 பேரின் கதி என்ன?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 6 மாதத்துக்குள் புதிய தலைவர்.. அதுவரை சோனியா! -காங்கிரஸ் முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்