கையில் மர்ம குறிப்பு.. போலி ஐடி கார்டு.. நாடாளுமன்ற வளாகத்தை பதறவைத்த காஷ்மீர் இளைஞர்!

Fake ID card .. Kashmir youth who terrorized the Parliament premises!

ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகப்படும் வகையில் அவரின் நடவடிக்கைகள் இருந்ததை அடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது புகைப்படத்துடன் கூடிய இரண்டு அடையாள அட்டைகளும் இருந்துள்ளன. டிரைவிங் லைசென்ஸில் ஃபிர்டாஸ் என்ற பெயரும், ஆதார் அட்டையில் மன்சூர் அகமது அஹாங்கர் என்ற பெயரும் இருந்துள்ளன.

மேலும், அவரின் கையில் ரகசிய குறிப்புகள் அடங்கிய துண்டு சீட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்த நிலையில் இவரின் சந்தேகமான நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, இப்போது டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய தகவல்கள் பல்வேறு இடங்களுக்கும் பகிரப்பட்டு யார் என்பது குறித்த தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

You'r reading கையில் மர்ம குறிப்பு.. போலி ஐடி கார்டு.. நாடாளுமன்ற வளாகத்தை பதறவைத்த காஷ்மீர் இளைஞர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இவற்றை செய்வதாலும் ஆரோக்கியமாக வாழலாம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்