மூணாறு நிலச்சரிவு ₹3.50 கோடி நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை

Munnar landslide, special team suggests ₹3.50 crores compensation for victims

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன.போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் நடத்திய மீட்புப்பணியில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் 66 உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 4 பேரைக் காணவில்லை. கடைசியாக 6 நாட்கள் நடந்த மீட்புப் பணியில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மீட்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு தாசில்தார் பினு ஜோசப் தலைமையிலான வருவாய்த்துறை சிறப்புக் குழு, இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசனிடம் நிலச்சரிவு குறித்த ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில் நிலச்சரிவில் வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என ₹88,41,824 அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹3.50 கோடி நஷ்ட ஈடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

You'r reading மூணாறு நிலச்சரிவு ₹3.50 கோடி நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிந்து சமவெளி நாகரிகம் ஏன் அழிந்தது? அமெரிக்கக் கல்வி நிறுவனம் கூறும் காரணம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்