Recent News

சண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்

சண்டைக் கோழியின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி தவறுதலாக வயிற்றில் பாய்ந்து அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த சண்டைக் கோழியை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. Read More

Feb 27, 2021, 17:26 PM IST

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து

இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது தான் காரணம் என்று நிமான்ஸ் மூளை உயிரியல் பிரிவு முன்னாள் ஆசிரியர் டாக்டர் ரவி கூறியுள்ளார். Read More

Feb 27, 2021, 14:51 PM IST

அதிரடி வீரர் யூசுப் பதான், வினய் குமாரின் திடீர் ஓய்வுக்கு இது தான் காரணமா?

அதிரடி வீரரான யூசுப் பதான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஆகியோர் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் தங்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்ற மன வேதனை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More

Feb 27, 2021, 14:46 PM IST

ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இது யாருடைய ஐடியா? இங்கிலாந்தை போட்டுத் தாக்கும் பாய்காட்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அகமதாபாத் பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது எந்த புண்ணியவானின் பிரகாசமான ஐடியா என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பாய்காட் கேள்வி எழுப்பியுள்ளார் Read More

Feb 27, 2021, 13:13 PM IST

16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்

தங்களுடைய 16 வயது மகளின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் 12 வயதான இளைய மகளை ₹ 10,000க்கு பெற்றோர் விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியை வாங்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்துள்ளது. Read More

Feb 27, 2021, 12:23 PM IST

பஞ்சரான தன்னுடைய கார் டயரை தானே மாற்றிய பெண் கலெக்டர் வீடியோ வைரல்

ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை ஜாக்கி எடுத்து சொந்தமாகவே கழட்டி ஸ்டெப்னி டயரை மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தான் அந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். Read More

Feb 27, 2021, 11:52 AM IST

தமிழக எல்லையில் ₹ 1.30 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More

Feb 27, 2021, 11:02 AM IST

பேட்ஸ்மேன்கள் செஞ்சுரி அடித்தால் அது சாதனை சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் என்ன பிரச்சனை?

பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தால் அதை சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் பிட்சை குறை கூறுவது என்ன நியாயம் என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா. Read More

Feb 27, 2021, 09:49 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. Read More

Feb 26, 2021, 17:38 PM IST

உபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். Read More

Feb 26, 2021, 15:40 PM IST