கொரோனாவில் இருந்து குணமானவர் எண்ணிக்கை.. உலகில் இந்தியா முதலிடம்..

India is top in corona recoveries in the world.

கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கோவிட்19 தொற்று பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு இது வரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில், அமெரிக்காவிலும், இந்தியாவிலும்தான் அதிக அளவில் தொற்று பரவியிருக்கிறது.இந்தியாவில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டி விட்டது. நேற்று ஒரே நாளில் புதிதாக 92,605 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் 1133 பேர் பலியாகியுள்ளனர். இது வரை இந்நோய்க்கு 86,752 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கோவிட்19 தொற்று பல நாடுகளில் பரவியிருக்கிறது. அதே சமயம், உலகிலேயே குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 43 லட்சத்து 14,606 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். இது 19 சதவீதமாகும். அமெரிக்காவில் 42 லட்சத்து 25,993 பேர் குணம் அடைந்துள்ளனர். இது 18.7 சதவீதமாகும். பிரேசிலில் 38 லட்சத்து 20,095 பேர் குணம் அடைந்துள்ளனர். இது 18.9 சதவீதமாகும் என்று தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனாவில் இருந்து குணமானவர் எண்ணிக்கை.. உலகில் இந்தியா முதலிடம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு தொற்று.. கொரோனா பலி 8811 ஆனது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்