கொரானா பரவலால் மோசமான நிதி நிலைமை.. பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம்..!

Worse financial situation due to Korana spread .. Risk of deficit multiplying ..!

மத்திய நிதி அமைச்சகம் 2020 - 21ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையாக 8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களிலேயே பற்றாக்குறை 8 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.இந்த 5 மாதங்களில் மட்டும் நிதிப் பற்றாக்குறை அளவு 8.7 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது. இது நிதிப்பற்றாக்குறை இலக்கை விட 9.3 சதவீதம் அதிகமாகும்.செலவு அதிகரித்தது ஒருபுறமிருக்க வரவும் வெகுவாக குறைந்திருக்கிறது
பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட வருவாய் வரவில் முதல் 5 மாதங்களில் 18.3 சதவீதம் மட்டுமே நிதி அமைச்சகத்துக்குக் கிடைத்திருக்கிறது.

அதேசமயம் இந்த 5 மாத காலத்தில் செலவுகளுக்கான இலக்கில் 41 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.இந்தியப் பொருளாதார சரிவு மற்றும் கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாட்டின் மிக முக்கியமான 8 உற்பத்தித் துறைகளில் உற்பத்தியின் அளவு 8.5 சதவீதம் குறைந்திருக்கிறது.அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு உற்பத்தி அளவு 8.5 சதவீதம் குறைந்து இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கியமான துறைகளில் உற்பத்தி குறைவு ஏற்பட்டதால், இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பக்கூடிய வாய்ப்பு உடனடியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.தொழில் துறையில் மத்திய அரசு தமது முதலீடுகளில் இருந்து விற்பனை மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. அந்த இலக்கை எட்டவும் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை.நமது நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நடப்புக் கணக்கில் உபரி நிதி அளவு 19.8 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
இது நமது ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 3.9 சதவீதமாகும்.

கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் மொத்த பற்றாக்குறையே 15 பில்லியன் டாலராகத்தான் இருந்தது .ஏற்றுமதி அதிகரித்த போதிலும் நாட்டில் இறக்குமதி குறைந்துள்ள காரணத்தினால் உபரி அதிகரித்துள்ளது.ஆனால் மத்திய நிதியமைச்சகம் 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.அரசு செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் முடியும் இந்தக் கடன் தொகை யை ஈடு கட்ட முடியும் என்று மத்திய நிதி அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

You'r reading கொரானா பரவலால் மோசமான நிதி நிலைமை.. பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1 வருடமாக இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்... சப் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்