பிறந்தா விமானத்தில் பிறக்கணும் ...

Indigo Airlines specializes in allowing a baby born on a flying plane to fly for free for a lifetime.

பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமான பயணம் செய்ய அனுமதி அளித்து இண்டிகோ விமானம் சிறப்பித்துள்ளது.நேற்று டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்தார். பயணிக்கும் வழியில் அவருக்கு திடீரென பிரசவ வலியெடுத்தது.

இதையடுத்து விமானப்பணிப் பெண்களின் அவரை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். பறக்கும் விமானத்திலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது இதையடுத்து அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்குவதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை தான் . தாயும் சேயும் நலமாகவே உள்ளனர். அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துகிறோம். அனைத்திற்கும் மேலாக எங்கள் விமானத்தில் பிறந்த அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் எங்கள் விமானத்தில் பயணிக்க இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading பிறந்தா விமானத்தில் பிறக்கணும் ... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 15 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்... ஆனால் வந்தது 200 பேருக்கும் மேல் சமாளித்தது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்