ஹத்ராஸ் தலித் பெண் வழக்கு: முதலில் பதிவு செய்த தகவல் அறிக்கையை மாற்றியது சிபிஐ

Hadras Dalit woman case: CBI changes first recorded information report

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இது குறித்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரப்பிரதேச அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர் பிரிவு சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த வழக்கை காஜியாபாத்தில் உள்ள சிபிஐ பிரிவு விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகக் காலையில் முதல் தகவல் அறிக்கை ஒன்றையும் சிபிஐ பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கை மற்றும் பத்திரிகைக் குறிப்பு இரண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

முதலில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையின் படி இந்தியத் தண்டனை சட்டம் 307(கொலை முயற்சி),376 ( டி) (கும்பல் கற்பழிப்பு ). 302 (கொலை ) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 3 ( 2)( வி) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கற்பழிப்பு .கொலை முயற்சி .கும்பல் கற்பழிப்பு. கொலை ஆகியவை சந்தேகிக்கப்படும் குற்றங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த முதல் தகவல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலே இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு அதன் பின் புதிதாக ஒரு செய்திக் குறிப்பு பதிவேற்றம் ஏற்றப்பட்டது .காலையில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை மாலையில் சிபிஐ மாற்றி அமைத்துள்ளது.

இந்த வழக்கில் புகார் செய்தவறான ரச்சா டிவி அந்த இளம் பெண்ணை அவரது சகோதரரே வயலில் வைத்து கழுத்தை நெரித்தாக குற்றம் குற்றம் சாட்டியிருந்தார். அதன் அடிப்படையில் மாநில அரசு இந்திய அரசுக்கு அனுப்பிய கோரிக்கையின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாதிரி அமைக்கப்பட்ட சிபிஐயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டிய இளைஞர், சந்த்‌பா காவல்நிலையத்தில் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் சிபிஐ தலித் பெண்ணின் சகோதரர் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளது.


அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் அங்கமான ஜவஹர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அளித்த பிரேதாக பரிசோதனை அறிக்கையில் தலித் பெண் தாக்கப்பட்டதாக மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதற்கான அறிகுறிகள் எதுவும் அவரது உடலில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி தாக்குதல் காயம் ஏற்பட்ட விவரத்திற்கு ஏற்ப கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் , அந்த அண்ணனே அந்தப் பெண்ணை தாக்கி கழுத்து நெரித்து தாக புகார் செய்துள்ளார் அந்தப் புகாரின் மீது சிபிஐ ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வழக்குப் பதிவு செய்துள்ளது.இதன்மூலம் முதலில் கூறியபடி கற்பழிப்பு புகார் போதிய ஆதாரம் இல்லை என்று கைவிடப்பட்டுள்ளது அந்தப் பெண்ணின் கழுத்தில் ஏற்பட்ட தாக்குதல் காயங்களுக்கு அவர் சகோதரனே பொறுப்பு என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு கடந்த அக்டோபர் முதல் தேதி தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பூலா கார்க்கி இளம்பெண் மரணம் குறித்துப் பதிவு செய்த வழக்கில் அந்தப் பெண்ணின் குடும்பத்தார் வந்து வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது உத்தரபிரதேச மாநிலம் கூடுதல் தலைமைச் செயலாளர் காவல்துறைத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.

You'r reading ஹத்ராஸ் தலித் பெண் வழக்கு: முதலில் பதிவு செய்த தகவல் அறிக்கையை மாற்றியது சிபிஐ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மலையாள நடிகர் சங்கம் தயாரிக்கும் படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்