நான் மோடியின் அனுமன். தேவைப்பட்டால் மார்பைத் திறக்க தயார்: சிராக் பஸ்வன் சீற்றம்

I am Modis Hanuman. ready open my chest and show if needed: Chirag Paswan

நான் மோடியின் அனுமன், தேவைப்பட்டால் என் மார்பைத் திறந்து காண்பிக்கத் தயார் என மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் இன் மைந்தன் சிராக் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார்.எல்.ஜே.பி தலைவர் சிராக் பாஸ்வான், அவரது பிரதமர் தனது இதயத்தில் வசிக்கிறார் என்று பிரச்சாரம் செய்வதற்குப் பிரதமர் மோடியின் முகம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது., நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
பீகாரில் நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ், பாரதிய ஜனதா என மும்முனை போட்டி இருந்த நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து அங்கு நான்கு முனைப் போட்டி உருவாகி இருக்கிறது.மத்தியில் பாஜக கூட்டணியுடன் இணக்கமாக இருக்கும் வேளையில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு இவர் பிரதமர் மோடியை மோடியின் படத்தைப் பயன்படுத்தலாம் என்று கருதி அதற்கு பாஜக தலைவர் சுஷில் மோடி உள்படப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் பிரதமரைப் பாராட்டியதோடு, பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் மோடியின் புகைப்படங்களைப் பயன்படுத்த மாட்டேன் அதற்கான அவசியமும் இல்லை. காரணம் மோடி தனது இதயத்தில் வசிக்கிறார்.நான் அவருடைய அனுமன். தேவைப்பட்டால், நான் என் மார்பைக் கிழித்து அதைக் காண்பிப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் படங்களைப் பிரச்சாரத்திற்காக எல்.ஜே.பி பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய பாஜக தலைவர் சுஷில் மோடிக்குப் பதிலளிக்கும் விதமாக சிராக் கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தவிர வேறு எந்த கட்சியும் வரவிருக்கும் தேர்தல்களுக்குப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்கள் பிரச்சார சுவரொட்டிகளில் பயன்படுத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டலாம் என்று சுஷில் மோடி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

தேர்தலில் தனது கட்சி எந்த பாஜக வேட்பாளரையும் எதிர்த்து போட்டியிடாது என்றும் ஒரு பாஜக தலைவரே பீகாரின் அடுத்த முதல்வராக இருப்பார் என்றும் சிராக் அறிவித்திருக்கிறார்.பிரதமர் மோடியுடனான எனது உறவு பாஜக தலைவர்களின் எந்தவொரு அறிக்கையினாலும் பாதிக்கப்படாது. வரவிருக்கும் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் உரைகளில் என்னைப்பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன்.

ஆனால் நவம்பர் 10 ஆம் தேதி பீகார் முதலமைச்சராக நான் ஒரு பாஜக தலைவரை உருவாக்குவேன், எங்களது கட்சி புதிய அரசின் ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். சட்டமன்றத் தேர்தலில் எந்த பாஜக வேட்பாளருக்கும் எதிராக நான் ஒருபோதும் வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன், என்று பாஸ்வான் கூறினார்.

"பிரதமர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நவம்பர் 10 க்குப் பிறகு, பாஜகவும் எல்ஜேபியும் இணைந்து பீகாரில் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

You'r reading நான் மோடியின் அனுமன். தேவைப்பட்டால் மார்பைத் திறக்க தயார்: சிராக் பஸ்வன் சீற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட் தேர்வு : தமிழக மாணவர் முதலிடம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்