தனியார் மயமாக்கலில் தீவிரம் காட்டும் பாஜக அரசு!

BJP govt intensifies privatization

ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்குப் பிறகு இதனைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 21 இலட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தனியார் மயமாக்கலின் ஒரு பகுதியாக, ஐடிபிஐ வங்கியைத் தனியார் மயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் மத்திய அரசுக்கு 47.11 சதவிகித பங்குகள் உள்ளன.

கடந்த 2019 ஜனவரியில் தான் இந்த வங்கியின் 51 சதவிகித பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கியது. இதன் மூலம் எல்ஐசி இந்த வங்கியில் 21,624 கோடி முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் பெற்ற பிறகு ஐடிபிஐ பங்கு விற்பனையைத் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த முடிவால் வங்கியின் பங்கானது நேற்று 18 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading தனியார் மயமாக்கலில் தீவிரம் காட்டும் பாஜக அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்