காவிரி தீர்ப்பாயம் அறிவித்த அளவை விட மேட்டூர் அணைக்கு அதிக தண்ணீர் வரத்து.

More water supply to Mettur Dam than announced by Cauvery Tribunal

காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக 7.5 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு 132. 9 டிஎம்சி . தற்போது கிடைத்துள்ள தண்ணீரின் அளவு 140 .4 டிஎம்சி ஆகும்.

சனிக்கிழமை காலை வரையிலான கணக்கின்படி மேட்டூர் அணையில் தண்ணீர் மட்டம் 99.5 அடியாக இருந்தது . அணையின் முழு கொள்ளளவு 120 அடி.மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 93.47 டிஎம்சி. தற்பொழுது அணையில் உள்ள தண்ணீரின் அளவு 63.8 டி எம்சி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் கால்வாய்கள் மூலம் 900 கன அடி திறந்துவிடப்படுகிறது.

You'r reading காவிரி தீர்ப்பாயம் அறிவித்த அளவை விட மேட்டூர் அணைக்கு அதிக தண்ணீர் வரத்து. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்