ஒரு உயிரிழப்பு இல்லை, இன்று ஒரு பாதிப்பும் இல்லை.. முன்மாதிரியான மிசோரம்!

no new corona cases in mizorom

தமிழ்நாடு, கேரளா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கொரோனாவின் கோர தாண்டவத்தை எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் விழி பிதுங்கி கொண்டு இருக்கின்றன. தினமும் 50 கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் இதே இந்தியாவில் கொரோனாவால் ஒரு உயிரிழப்புகூட நிகழாத மாநிலம் உள்ளது. அது வடகிழக்கு மாநிலமான மிசோரம் தான். மிசோரம் மாநிலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது.

இன்று மிசோரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதேபோல் இதுவரை அங்கு கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. மிசோரம் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ``மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை. மாநிலத்தில் இதுவரை 2, 253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டவர்களில் 2000 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 95.34% என்ற அளவில் உள்ளது. தற்போது 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஒரு உயிரிழப்பு இல்லை, இன்று ஒரு பாதிப்பும் இல்லை.. முன்மாதிரியான மிசோரம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்