பொது நுழைவுத் தேர்வும் வேண்டாம்! புதிய கல்வி கொள்கையும் வேண்டாம்!

Do not take the public entrance exam! No new education policy!

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வி துறை கடிதம் எழுதியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குறித்து மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன. அந்தவகையில் இதன் அம்சங்கள் குறித்து அலச, தமிழக அரசின் உத்தரவின் பேரில் முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது இந்த குழு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து எந்தவொரு கல்லூரி படிப்பை தேர்வு செய்வதற்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என்று புதிய கல்வி கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை சரியானது அல்ல என்றும் எனவே இந்த பரிந்துரையை புதிய கல்வி கொள்கையில் இருந்தே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பொது நுழைவுத் தேர்வும் வேண்டாம்! புதிய கல்வி கொள்கையும் வேண்டாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்