தகவல் பாதுகாப்பு மசோதா விசாரணை அமேசான் நிறுவனம் ஆப்சென்ட்

Amazon refuses to appear before Joint Committee of Parliament on Data Protection Bill

தகவல் பாதுகாப்பு மசோதாவிற்கான கமிட்டி விசாரணையில் ஆஜராக அமேசான் நிறுவனம் மறுத்துவிட்டது.தகவல் பாதுகாப்பு மசோதா பரிசீலனைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் விளம்பரதாரர்களின் வணிக நலன்களுக்காக அதன் பயனர்களின் கணக்கிலிருந்து அவரைப் பற்றிய விபரங்களைப் பயன்படுத்துகிறது . இது தடுக்கப்பட வேண்டும் என அரசு கருதுகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி பல்வேறு சமூக வலைத் தள நிறுவனங்களுக்கும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும் அழைப்பு அனுப்பி விசாரித்து வருகிறது.இந்தக் கமிட்டியின் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் பிரதிநிதிகளை வரும் 28ஆம் தேதி ஆஜராகும்படி கேட்டுக் கொண்டது.

ஆனால் அமேசான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விசாரணைக்கு ஆஜராக இதுவரை ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தக் கமிட்டியின் தலைவராக உள்ள பாஜக எம்பி மீனாட்சி லேகி அரசுக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பும் என்றும் அதில் அமேசான் நிறுவன பிரதிநிதிகள் கமிட்டி முன் ஆஜராவதற்கு உரிய நிர்பந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார் .இந்த கமிட்டியின் முன் பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பிரிவின் தலைவர் அன்றிதாஸ் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.வரும் அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி டிவிட்டர் நிறுவனத்துக்கு எம்பிக்கள் கமிட்டி சமமான அனுப்பியுள்ளது. அதே போல அக்டோபர் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கூகுள் மற்றும் பேடி எம் நிறுவனங்களுக்கும் அம்மன் அனுப்பப்பட்டுள்ளன.

You'r reading தகவல் பாதுகாப்பு மசோதா விசாரணை அமேசான் நிறுவனம் ஆப்சென்ட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்ச்சை பாடகி என்ட்ரியால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கிலி.. பிரபல நடிகை எச்சரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்