சீனாவுடனான போரில் பயன்படுத்தபட்ட ராணுவ டாங்க் வெலிங்டன் இராணுவ மையத்திற்கு வந்தது..

The military tank used in the war with China arrived at the Wellington Army Center.

அண்டை நாடுகள் நாடுகளுடனான போரில் பயன்படுத்தப்பட்ட டேங்க் ஒன்று வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து. இந்த டாங்க் 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா சீனா மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது . 40 டன் எடை கொண்ட இந்த டாங்கை ஏற்றி வந்த வாகனம் நேற்று கூடலூர் வந்தடைந்தது.

அங்கிருந்து இருந்து உதகை செல்லும் சாலை மிக குறுகிய மலைப்பாதை என்பதால் மேல் கூடலூர் என்னும் பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டது.பின்னர் வேறு ஒரு வாகனம் மூலமாக குன்னூர் ராணுவ பயிற்சி முகாமுக்குக் கொண்டு வரப்பட்டது. 40 டன் எடை கொண்ட இந்த டாங்கை 2 கிரேன்கள் மூலம் வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றும் பணி தோல்வி அடைந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வேறொரு கனரக வாகனத்தில் மாற்றப்பட்ட டாங்க் உதகையை வந்தடைந்து வெலிங்டன் இராணுவ மையத்திற்குச் சென்றது. அங்கு அந்த டாங்க் காட்சிப்படுத்தப்படவுள்ளது.உதகை பிங்கர்போஸ்ட் பகுதியிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் பிரதான சாலையைப் பீரங்கி கடந்து சென்றதை ஏராளமானோர் வியப்புடன் பார்த்தனர்.

You'r reading சீனாவுடனான போரில் பயன்படுத்தபட்ட ராணுவ டாங்க் வெலிங்டன் இராணுவ மையத்திற்கு வந்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை வக்போர்டு கல்லூரி நிர்வாக குழு தேர்தலுக்கு இடைக்கால தடை...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்