பதுக்கலை தடுக்க வெங்காயத்தை இருப்பு வைக்க வரம்பு : மத்திய அரசு நிர்ணயம்...!

Limit stocking of onions to prevent hoarding: Central Government fixing

வெங்காய விலை அதிகரிப்பைத் தொடர்ந்து வியாபாரிகள் அதனைப் பதுக்கல் செய்யாமல் தடுக்க வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.கனமழை காரணமாக வெங்காயம் அதிகமாக விளையும் ஆந்திரா , மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டது.

இதனால், சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி விதிமுறைகளைத் தளர்த்தியது. அத்துடன் , மத்திய தொகுப்பில் இருந்த வெங்காயத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கவும் முன்வந்தது.
இதனிடையே இந்த , தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வியாபாரிகள் அவற்றைப் பதுக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர் இதைத் தடுக்கும் வகையில் வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில் : இனி சில்லறை வியாபாரிகள் அதிகபட்சமாக 2 டன் வரை வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரையிலும் இருப்பு வைக்கலாம். இந்த வரம்பை மீறும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த மாதம்தான் நாடாளுமன்றத்தில் இந்த அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தன் டிவிட்டர் பக்கத்தில், “அதிகரித்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் மோடி அரசு மூன்றாவது கட்டமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

You'r reading பதுக்கலை தடுக்க வெங்காயத்தை இருப்பு வைக்க வரம்பு : மத்திய அரசு நிர்ணயம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்