திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்.

Free darshan from tomorrow at Tirupati temple

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தொற்று காரணமாக சில மாதங்கள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் மட்டும் பெற்று வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வாகன சேவைகள் கூட மாட வீதிகளில் நடைபெறவில்லை. பிரம்மோற்சவத்தின் தொடர்புடைய அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெற்றது.

இதனிடையே தற்போது நிலைமை சீரடைந்ததாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக கோவில் நிர்வாகம் அதிகரித்தது. எனினும் இதுவரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை முதல்நிர்வாகம் அறிவித்துள்ளது இதற்காக தினமும் 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும். திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் இந்த இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

You'r reading திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரஸ்வதி பூஜை நடத்தி ஏழைகளுக்கு நிதி அளித்த ஆண்டிபட்டி சீமான்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்