ராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள்

Modi responds to Ravana: Farmers express anger in Punjab

தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காகப் பல அடி உயர ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை நெருப்பு வைத்து எரிப்பது வழக்கம்.இந்த ஆண்டு பஞ்சாபில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்குப் பதிலாக பாரதீய கிஸான் யூனியன் விவசாயிகள் அமைப்பு நூதன முறை ஒன்றை கடைப்பிடித்தனர்.மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பல அடி உயர உருவ பொம்மையை அவர்கள் தயார் செய்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களால் ஏழை எளிய விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. தொழிலதிபர்கள் அதானி, அம்பானி கொண்டவர்கள் தான் தான் பயனடைகின்றனர் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்களது படங்களும் இந்த உருவ பொம்மையில் சேர்க்கப்பட்டன. பின்னர் தசாரா பண்டிகை நிகழ்ச்சியில் மோடி, அதானி, அம்பானி உருவ பொம்மைகள் ஒருசேரக் கொளுத்தப்பட்டன.

You'r reading ராவணனுக்கு பதில் மோடி : பஞ்சாபில் கோபத்தை வெளிப்படுத்திய விவசாயிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடல்ட் பட இயக்குனருக்கு பக்தி முத்திபோச்சி.. நெட்டிஸன்கள் கலாய்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்