சகோதரிகள் படிக்க வேண்டும்... டீ விற்க தொடங்கிய சிறுவன்!

14-year-old boy sells tea after mother loses job, helps sisters studies

கொரோனா லாக் டவுன் பல்வேறு நபர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அவர்களின் ஒருவரின் 14 வயது சிறுவன் சுபான். டெல்லியைச் சேர்ந்த இந்த சிறுவனின் 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். சுபானின் தாய் மட்டுமே குடும்பத்தின் சம்பாரிக்கும் நபர். இதற்கிடையே, கொரோனா சுபானின் தாயின் வேலையை பறிக்க, குடும்பம் ஏழ்மை நிலைக்கு சென்றுள்ளது.

அதேநேரம் அவரின் சகோதரிகள் படித்து வருவதால் குடும்பத்தில் பணத்தின் தேவை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தனது சகோதரிகள் படிக்க வேண்டும் என்பதற்காக குடும்ப சுமையை 14 வயதிலேயே சுமக்க ஆரம்பித்துள்ளார் சுபான். தற்போது தினமும் டீ விற்று வருகிறான். இதுகுறித்தது சிறுவன் சுபான் ANIக்கு அளித்த பேட்டியில், ``என் சகோதரிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்காக நான் தற்போது வேலை செய்யத் தொடங்கியுள்ளேன். இப்போது என் குடும்பம் நிதி நெருக்கடியில் இருப்பதால் வேலை செய்து வருகிறேன். லாக் டவுன் முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதும், நானும் படிப்பேன். அதுவரை டீ விற்க செல்வேன்" எனக் கூறியுள்ளார். இந்த சிறிய வயதில் இவ்வளவு பொறுப்புடன் சுபான் இருப்பது போன்ற புகைப்படங்கள் செய்திகள் வெளியானதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

You'r reading சகோதரிகள் படிக்க வேண்டும்... டீ விற்க தொடங்கிய சிறுவன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 11 துண்டுகளாக கிடந்த உடல் 20 ஆண்டுகளுக்கு முன் முதல் கொலை -உ.பியை அதிரவைத்த நபர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்