அதிரவைக்கும் ஆந்திர நிலவரம்: பள்ளிகள் திறந்த மூன்றே நாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று.

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 10 மாணவர்கள், 150 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 10 மாணவர்கள், 150 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று. ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கும் 10, மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில அளவில் சில சூழ் நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சினிமா தியேட்டர்களும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10 வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாட்களில் மட்டும் சித்தூர் மாவட்டத்தில் 125 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் உட்பட ஆந்திராவில் ஒட்டு மொத்தமாக 150 ஆசிரியர்களுக்கும், 10 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே பெருவாரியான மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆந்திர மாநிலத்தில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆந்திராவில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த அனுமதிக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது

You'r reading அதிரவைக்கும் ஆந்திர நிலவரம்: பள்ளிகள் திறந்த மூன்றே நாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அம்மன் ஆட்டம் ஆடி பாடிய பாடகியை பாராட்டிய ஏ.ஆர். ரஹ்மான்.. ஆக்‌ஷன் அம்மா ஈஸ் பேக்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்