குடைச்சல் கொடுத்த சிபிஐ... அதிரடி முடிவால் கலங்க வைத்த கேரள அரசு!

Kerala government withdraws consent to CBI for probes in state

தங்க கடத்தல் வழக்கு சூடு பிடித்திருக்கும் நிலையில் கேரள ஆளும் கட்சியான சிபிஎம்மின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இவரை சுற்றிவளைத்து சிபிஐ குடைச்சல் கொடுத்து வருகிறது. இவரை மட்டுமல்ல, தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள அரசு, அரசு அதிகாரிகள் என பல்வேறு நபர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது சிபிஐ. இதனால் புதிய தலை வலியை சந்தித்து வருகிறது கேரள அரசு. சிபிஐயின் போக்கை கட்டுப்படுத்த, கேரள அரசு தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ``சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை கேரள அரசு திரும்ப பெற உள்ளது.

சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் வழக்குகளை விசாரிக்க, எந்த வித அனுமதியும் பெறாமல், நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மாநிலங்கள் பொது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி தான் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மாநிலங்களுக்குள் விசாரணைகளுக்கு சென்று வந்தது. இந்த ஒப்புதலை தான் கேரள அரசு திரும்ப பெற இருக்கிறது. இதனால் இனி கேரள அரசின் ஒப்புதல் இல்லாமல் விசாரணைக்காக சிபிஐ கேரளாவுக்குள் நுழைய முடியாது. கேரளா மட்டுமல்ல, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading குடைச்சல் கொடுத்த சிபிஐ... அதிரடி முடிவால் கலங்க வைத்த கேரள அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நல்லா படம் பண்ணா இயக்குனருக்கு கார் பரிசு.. செலவை இழுத்துவிட்டால் டோஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்