கேரள அரசு பஸ்களில் திடீர் கட்டணச் சலுகை..

கேரளாவில் அரசு பஸ்களில் 25 சதவீதம் கட்டண சலுகையினை அம்மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

கொரோனா தளர்வையொட்டி, கேரளா முழுவதும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொற்று அச்சம் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.இதனால் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் சூப்பர் பாஸ்ட் பஸ்களில் 25 சதவீத சிறப்புக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் பயணம் செய்வோருக்கு இந்த கட்டண சலுகை வழங்கப்படும் . இந்த நாட்களில் பொது விடுமுறை இருப்பின் இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த சலுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த சலுகை திட்டம் தொடரும் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

You'r reading கேரள அரசு பஸ்களில் திடீர் கட்டணச் சலுகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாத்தான்குளத்தில் பரபரப்பு : அரசியல் கட்சிகளை அலற வைத்த எச்சரிக்கை போஸ்டர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்