பட்ஜெட் பற்றி ஐடியா இருக்கா? பொதுமக்கள் ஆலோசனை வழங்க, மத்திய நிதியமைச்சகம் அழைப்பு

பட்ஜெட் தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது

2021-22 ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஆலோசனை வழங்க, மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்காக, நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையை பெற ஏற்கனவே பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்தை mygov.in என்ற இணைய தளத்தில் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்படி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தகுந்த நிபுணர்களால் பரிசீலிக்கப்படும் என்றும் அதில் சிறந்த கருத்துக்கள் பட்ஜெட் தயாரிப்பின் போது கடைபிடிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

You'r reading பட்ஜெட் பற்றி ஐடியா இருக்கா? பொதுமக்கள் ஆலோசனை வழங்க, மத்திய நிதியமைச்சகம் அழைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிக்கலில் சிவகாசி : ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்