தவிடுபொடியானது தனியார் நிறுவன ராக்கெட்

பிரான்ஸ் நாட்டில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்று அனுப்பிய ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது.விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் பல நாட்டு அரசாங்கங்கள் மட்டுமல்ல சில தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளது. சில நாடுகளில் இத்தகைய தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ராக்கெட்டுகளை அனுப்பும் பணிகளைச் செய்து வருகிறது.

ஐரோப்பாவில் ஏரியான்ஸ்பேக் என்ற தனியார் நிறுவனம் இவ்வாறு ராக்கெட்டுகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது . இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த 16ஆம் தேதி பிரஞ்ச் கயானாவில் இருந்து வேகா விவி17 என்ற ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட்டில் இரு செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டிருந்தன. இந்திய மதிப்பில் சுமார் 2800 கோடி பவுண்ட் செலவில் இவை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

ராக்கெட்டின் நான்காவது பகுதியில் பகுதியில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளா றை சரி செய்ய முடியாததால் இந்த ராக்கெட் வெடித்துச் சிதறி பூமியில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

You'r reading தவிடுபொடியானது தனியார் நிறுவன ராக்கெட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரூ.37000 க்கு சரிந்த தங்கத்தின் விலை! 19-11-2020

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்