திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல்

திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்திலிருந்து ஏழுமலையான் கோவிலுக்கு கத்தரிக்காய் பாதயாத்திரையாக செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கு அலிபிரி மற்றும் சீனிவாசமங்காபுரத்தில் ஸ்ரீவாரிமெட்டு என்ற மலைப் பாதை உள்ளது. ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை திருப்பதியில் இருந்து திருமலைக்கு குறைந்த அளவு படிகளுடன் உள்ளதால் இந்த மலைப்பாதையையே பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்காலிகமாக இந்த மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சகஜ நிலை ஏற்பட்ட பிறகு மீண்டும் இந்த மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை அலிபிரி மலைப் பாதையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

You'r reading திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆயிரம் கோடி கடன் வாங்கியவர்களை விட்டுவிட்டு சிறு கடன் பெற்றவர்களை துன்புறுத்தும் வங்கிகள் : உயர்நீதிமன்றம் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்