தோட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் தவிப்பு : ட்ரோன் மூலம் உணவு சப்ளை

ஆந்திராவில் மாங்காய் தோட்டம் ஒன்றில் காவலுக்கு இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களுக்கு ட்ரோன் மூலம் உணவு வழங்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர். தொடர் மழை காரணமாக சதாசிவ கோனா அருவியில் ஏற்பட்ட அதிக வெள்ளபெருக்கால் அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது.

இதனால் இன்று காலை அந்த தோப்பை வெள்ளம் சுழ்ந்தது. தகவலறிந்த போலீசார் அங்கு தீயணைப்பு துறையினருடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மீட்பு பணியில் தாமதம் மூலம் உணவு பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை மீட்க பைபர் படகுகள் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் மீட்பு பணி நடைபெற உள்ளதாக திருப்பதி எஸ்.பி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

You'r reading தோட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் தவிப்பு : ட்ரோன் மூலம் உணவு சப்ளை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோட்டார் உரிமையாளர், மாற்று நபரையும் சேர்க்க வேண்டும்... மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்