திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காண தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாகச் சுவாமி தரிசனத்திற்கு வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான சிறப்புத் தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானைத் தரிசிக்கப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு பத்து நாட்களுக்குச் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்களை அனுமதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவர். இதற்கான 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட் இன்று காலை முதல் தேவஸ்தான இணையதள முகவரியான www.tirupatibalaji.ap.gov.in என்ற தளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

You'r reading திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விவசாயிகளுக்கு தமிழில் தகவல் கொடுங்கள் : புதுவை ஆளுநர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்