திருப்பதி கோயிலில் 24ம் தேதி முதல் ஏகாதசி இலவச தரிசன டோக்கன்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் 24ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்படும் எனத் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்க வாசல் எனப்படும் சிறப்பு வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே நடக்கும் ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலானோர் வேண்டுகோளை ஏற்றுப் பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்களை அடிமைத்தன தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.இதற்கான சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதே வழியில் இலவச தரிசனத்திற்காகத் தினமும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனத் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது.25 ம் தேதி முதல் ஜனவரி 3 ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாகத் தரிசனம் செய்யும் 10 நாள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு லட்சம் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்க முடிவு செய்துள்ளோம்.


இந்த இலவச தரிசன டோக்கன்கள் வரும் 24ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள் அடிப்படையில் இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் 8 மணி நேரத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில் 24ஆம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது

You'r reading திருப்பதி கோயிலில் 24ம் தேதி முதல் ஏகாதசி இலவச தரிசன டோக்கன்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கணவராக கிடைத்தது என் பாக்கியம்.. அஞ்சலி தேவி பட வசனம் சொல்லி நடிகை வாழ்த்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்