உலகின் முதல் செயற்கை சிக்கன்: டேஸ்ட் பண்ண சிங்கப்பூர் ரெடி

மருத்துவ சோதனைக் கூடங்களில் உருவாக்கப்பட்ட கோழிக் கறி, உலகில் முதன் முறையாகச் சிங்கப்பூரில் உள்ள விற்பனைக்கு வர உள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார்.இந்த நிறுவனம் கோழியின் செல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சோதனைக் கூடங்களில் வளர்த்து கோழிக் கறியை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கை கறியைப் பல கட்ட பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், இதனைப் பயன்படுத்தச் சிங்கப்பூர் உணவு கழகம் கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த கோழிக் கறி விற்பனையை ஜஸ்ட் ஈட் நிறுவனம் தொடங்க உள்ளது. சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த கறியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் வரும் சனிக்கிழமை முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த உணவுகளை முதன் முறையாக, 13 முதல் 18 வயதுடைய 4 மாணவர்கள் ருசி பார்க்க உள்ளனர்.ஒரு உயிரைக் கொல்லாமல் உருவாக்கப்பட்ட இறைச்சியை, முதன் முதலாக இந்த மனித குழு ருசி பார்க்க உள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று ஜஸ்ட் ஈட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோழிக் கறி விற்பனையைத் தொடர்ந்து, மருத்துவ சோதனைக் கூடத்தில் உருவாக்கப்பட்ட பன்றி இறைச்சியையும் விற்பனை செய்ய இந்நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்கு முன்னர் பீன்ஸ் மூலம் செயற்கை முட்டையையும் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலகின் முதல் செயற்கை சிக்கன்: டேஸ்ட் பண்ண சிங்கப்பூர் ரெடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாக்குறுதிப்படி அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. பீகார் அமைச்சரவை ஒப்புதல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்