JEE தேர்வு இனி தமிழிலும் நடத்தப்படும் : மத்திய அமைச்சர் தகவல்

நீட் தேர்வைப் போலவே, JEE தேர்வும் இனி தமிழ், உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் JEE மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ள JEE Main தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், வரும் ஜனவரி 16-ம் தேதி வரை https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=1&LangId=P என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் JEE Main தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் நீட் தேர்வைப் போலவே, JEE மெயின் தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

You'r reading JEE தேர்வு இனி தமிழிலும் நடத்தப்படும் : மத்திய அமைச்சர் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராவணன் பற்றி பேசிய நடிகர் மீது வழக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்