ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் கடந்த மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் கர்ணனை நேரடியாக வரவழைத்து, விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையின் போது இனிமேல் இது போன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று கர்ணன் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர்.இது குறித்து விளக்கமளிக்கத் தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில் முன்னாள் நீதிபதி கர்ணனைக் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ஆவடியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து.இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற கர்ணனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

You'r reading ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமரின் அலுவலகத்தை ஓஎல்எக்ஸ் மூலம் விற்க முயற்சி : 4 பேர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்