ஹெல்மட் நிதியில் ஊழல் : ஓய்வு பெற்ற எஸ்பி உள்பட மூவருக்கு ஓராண்டு சிறை

புதுச்சேரி மாநிலத்தில் போலீசாருக்கு ஹெல்மெட் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் செய்ததாக ஒரு எஸ்பி உட்பட மூவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

புதுச்சேரி மாநில காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு, போலீசாருக்கு ஹெல்மெட்டுகள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்த புகாரை சிபிஐ விசாரித்து வந்தது.புகாரை விசாரித்த சிபிஐ, அப்போதைய எஸ்.பி ராமச்சந்திரன், ஆய்வாளர் ரஹீம், உதவி ஆய்வாளர் டொம்னிக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இவர்கள் மீதான வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன், ரஹீம், மற்றும் டொம்னிக் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை அளித்து தலைமை நீதிபதி தனபால் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading ஹெல்மட் நிதியில் ஊழல் : ஓய்வு பெற்ற எஸ்பி உள்பட மூவருக்கு ஓராண்டு சிறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதை பார்ட்டி நடத்திய கும்பல் கைது... கடைசி நிமிடத்தில் போலீசிடம் சிக்காமல் தப்பிய நடிகை, கணவர்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்