புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை

புதுச்சேரி மிஷன் தெருவில் உள்ள 'சூகா' என்ற சாக்லெட் கடையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரபலங்களின் உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைப்பது வாடிக்கை.இந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் அவரது உருவத்தை சாக்லெட்டால் சிலை வடிவமைத்துள்ளனர்.

இந்த சாக்லெட் சிலையைத் தயாரிக்க 161 மணி நேரம் ஆகியிருக்கிறது. வரும் ஜனவரி 10ம் தேதி வரை இந்த சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த சாக்லேட் சிலையை உருவாக்கிய ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இதற்கு முன் ராணுவ வீரர் அபிநந்தன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த், கார்ட்டூன் கதாபாத்திரம் மிக்கி மவுஸ் உட்பட 12 பிரபலங்களின் சிலைகள் இந்த கடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

You'r reading புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டசபையை கூட்ட சட்டப்படி அனுமதி கேட்கவில்லை... முதல்வருக்கு கவர்னர் பதில்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்