1,561 தொலைத்தொடார்பு கோபுரங்கள் நாசம்.. கதறும் ஜியோ!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 35 நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. விவசாயிகளும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துவிட்டனர்.

மேலும், வேளாண் சட்டங்களால் அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்கள் வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபபட்டுள்ள விவசாயிகள் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை தொடர்ந்து நாசம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன.

இதுவரை சுமார் 1,561 ஜியோ செல்போன் நிறுவன கோபுரங்கள் விவசாயிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வா் அமரீந்தர் சிங், விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் விவசாயிகள் நாச வேலையில் ஈடுபட்டு தான் வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜியோ நிறுவனம் நேரடியாக, மாநில முதல்வர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐியோ எழுதிய கடித்தில், ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுகின்றன. நாசவேலை செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

You'r reading 1,561 தொலைத்தொடார்பு கோபுரங்கள் நாசம்.. கதறும் ஜியோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடியே முதல்வர் வேட்பாளர்.. இல்லையேல் ஒதுக்கி வைப்போம்!.. கே.பி.முனுசாமி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்