கர்நாடக எல்லையில் கோவில் திருவிழா ரத்து: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஏழு தண்ட முனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது .

அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம் கூடலூர் பகுதியில் ஏழு தண்ட முனியப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம் ‌. இத்திருவிழாவில் தமிழகம் கர்நாடக மாநிலங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கோவிலில் திருவிழா நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு திருவிழா நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனோ பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாது திருவிழா நடப்பதாகக் குறிக்கப்பட்ட நாட்களான ஜனவரி 16 , 17 ஆகிய இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு கொரோனா பரவல் காரணமாகச் சொல்லப்பட்டாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்றும் அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னடர்கள் சிலர் மாநில எல்லையில் தமிழ் எழுத்து கொண்ட பெயர் பலகைகளை அடித்து நொறுக்கியதைத் தொடர்ந்து ஏதேனும் பிரச்சனை வரலாம் என்ற காரணத்திற்காகவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது கூறப்படுகிறது.

You'r reading கர்நாடக எல்லையில் கோவில் திருவிழா ரத்து: மாவட்ட ஆட்சியர் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தைகள் படத்துக்கு ரஜினி பட இசை அமைப்பாளர் இசை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்