சிறுமிகள் உள்ளனர் பாஜக ஓட்டு சேகரிக்க வர வேண்டாம்: கேரளாவில் போஸ்டர்களால் பரபரப்பு

சிறுமிகள் இருப்பதால் பாஜகவினர் ஓட்டு சேகரிக்க வர வேண்டாம் என்று வீட்டின் வெளியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள செங்கன்னூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் சிறுமி ஆசிப்பா, உ.பி., மாநிலத்தை சேர்ந்த சிறுமிகளை பலாத்காரம் செய்த சம்பவங்கள் தேர்தல்களில் எதிரொலிக்க இருக்கின்றன.

அந்த வகையில், செங்கன்னூர் தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராக வாசகங்களை அடங்கிய நோட்டீசை கதவின் வெளியே மாட்டி வைத்துள்ளனர். ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தொடங்கவிடப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள். வாக்கு சேகரிக்க பஜகவினர் உள்ளே வர வேண்டாம். கேட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இதுபோன்ற பாஜகவினருக்கு எதிராக பல வாசகங்கள் அத்தொகுதி மக்களின் வீட்டின் வெளியே ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: பாலியல் பலாத்காரம் செய்து 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது. இந்த சம்பவங்களில் பாஜனதா ஆதரவாளர்கள் தொடர்பில் இருப்பது வெட்ககேடானது. ஆனால், இதுகுறித்து அக்கட்சியின் தலைமை எந்த அறிக்கையும் வெளியிடாதது மேலும் மனதை புண்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிறுமிகள் உள்ளனர் பாஜக ஓட்டு சேகரிக்க வர வேண்டாம்: கேரளாவில் போஸ்டர்களால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் போட்டி : சென்னையை வீழ்த்திய பஞ்சாப் அணி வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்