அலுவலகத்தில் குத்தாட்டம்: கதவைப் பூட்டிக் கொண்டு லூட்டியடித்த அரசு ஊழியர்கள் (வீடியோ)

மத்திய பிரதேசத்தில் அலுவலகத்தின் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே குத்தாட்டாம் போட்ட அரசு ஊழியர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலம், தேவாஸ் என்ற பகுதியில் குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அலுவலகத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு பிறந்த நாள். இதையட்டி, பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில், அதுவும் பணிநேரத்தில் அலுவலகத்தின் கதவை பூட்டிக் கொண்டு ஆண் மற்றும் பெண் அரசு ஊழியர்கள் நடனமாடி உள்ளனர். இதை அங்கு பணிபுரியும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து தற்செயலாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, குழந்தைகள் நல உயர் அதிகாரி கூறுகையில், “பணி நேரத்தில் நடனமாடிய அனைத்து ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு சிறிய வேலைக்கு கூட அத்தனை முறை தங்களை அலைக்கழிக்கும் அரசு ஊழியர்கள், பணி நேரத்தில் பொறுப்பின்றி நடனம் ஆடுகிறார்களா ?” என்று கொந்தளித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அலுவலகத்தில் குத்தாட்டம்: கதவைப் பூட்டிக் கொண்டு லூட்டியடித்த அரசு ஊழியர்கள் (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலியல் வலை... பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்