ஒரே டுவிட்.. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரியானா... கூகுளில் அதிகளவில் தேடிய இந்தியர்கள்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க பாப் பாடகி ரியானா யார்? என்று கூகுளில் இந்தியர்கள் அதிகளவில் தேடியுள்ளனர். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும்நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில் சிஎன்என் இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரையை டேக் செய்து, அத்துடன் இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.

இவரது டுவிட் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகை கங்கனா ராவத் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பலர் தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனால், யார் இந்த பாடகி ரியானா என்ற கேள்வி இந்தியர்கள் மத்தியில் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தியர்கள் பலரும் யார் இந்த பாப் பாடகி ரியானா? அவரது மதம், பின்னணி குறித்து கூகுளில் தேடியுள்ளனர்.

You'r reading ஒரே டுவிட்.. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரியானா... கூகுளில் அதிகளவில் தேடிய இந்தியர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மூடப்பட்ட அறையில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாக கருத முடியாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்