20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை: ஐதராபாத்தில் செயல்படுத்த தெலுங்கானா அரசு திட்டம்.!!!

ஐதராபாத்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சாலைகளில் மக்களின் ஆச்சர்யத்தையும், குறிப்பாக இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டியது இரட்டை அடுக்கு பேருந்துகள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், பேருந்தின் மேல்தளத்தில் ஏறி சவாரி செய்ததை பலரும் மகிழ்ச்சியாக நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.

சுமார் இருபது ஆண்களுக்கு முன்புவரை இந்த வரலாற்று நகரத்தின் சாலைகளில் இப்பேருந்துகள் இயங்கின. ஆனால், கடந்த 20 வருடங்களாக இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இருப்பினும், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் லண்டன் உட்பட உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்க தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

வரும் மாதங்களில் ஐதராபாத் நகர சாலைகளில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனுபவமிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து 25 இரட்டை பேருந்துகளை வாங்குவதற்கும் தெலங்கானா அரசு ஆர்டிசி டெண்டர்கள் வழங்கியுள்ளது. சைக்கிள்-ரிக்‌ஷாக்கள், டபுள் டெக்கர் பேருந்துகள் போன்ற பாரம்பரிய போக்குவரத்து முறைகளை படிப்படியாகக் கொண்டுவருவது நிச்சயமாக மக்களிடம் வரவேற்பை பெறும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை: ஐதராபாத்தில் செயல்படுத்த தெலுங்கானா அரசு திட்டம்.!!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல செய்தி: வீடியோவை மியூட் செய்து அனுப்பும் வசதியை சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகம்.!!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்